நாடகமாடுகிறதா பாஜக-சிவசேனா கூட்டணி..?

0

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், ஐரோப்பிய யூனியன் குழுவின் எம்.பி.க்களை காஷ்மீர் களாய்வு குறித்து இன்று எழுதப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் விவகாரம் என்பது முற்றிலும் உள்நாட்டு விவகாரம் என்று இந்திய அரசு உலக அளவில் கூறி வருவதாகவும், இது சர்வதேச விவகாரம் அல்ல என்று வலியுறுத்தி வருவதாகவும் சாம்னா நாளேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஷ்மீருக்‍குள் ஆய்வு செய்ய, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 23 எம்.பி.க்களுக்கு எவ்வாறு மத்திய அரசு அனுமதி அளித்தது. நாட்டிலுள்ள கட்சிகளுக்‍கு அனுமதி அளிக்‍காத பாஜக,  ஏன் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த எம்.பி.க்களை மட்டும் அனுமதித்தது என்று கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த நிலையில், மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் முதலமைச்சர் அதிகாரத்தை பகிர்வதில் பாரதிய ஜனதா – சிவசேனா இடையே இழுபறி நீடித்து வருகிறது.

ஆனால் பாஜக கட்சியும், சிவசேனா கட்சியும் இந்துத்துவா கொள்கைகளை நாடு முழுவதும் நிலைநாட்ட வேண்டும் என்ற கொள்கைகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed.