“பாஜகவுடன் இணைந்தே செயல்பட முடியாது: ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு வேண்டும்”- சிவசேனா

0

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் 164 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 105 தொகுதிகளிலும், 124 தொகுதிகளில் போட்டியிட்ட சிவசேனை 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இதுகுறித்து சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததாவது: பாஜக தலைவர் அமித்ஷாவும், நானும் இது குறித்து ஆலோசித்தோம். அப்போது நாங்கள் கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தை இருவரும் சமமாக பங்கிட்டு கொள்வதாக முடிவெடுத்தோம்.

பாஜகவை விட நாங்கள் குறைவான தொகுதியில் போட்டியிட்டிருக்காலம். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்களுடன் இணைந்தே இருக்க முடியாது. எங்களது கட்சியும் வளர வேண்டும் என்றார்.

Comments are closed.