மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த 50க்கும் மேற்பட்ட சிவசேனா கட்சியினர்…!

0

மகாராஷ்ட்ரா மாநிலம், பால்கார் மாவட்டத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட சிவசேனா கஸ்டியிலிருந்து விலகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துள்ளனர்.

அம்பேசாரி கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்டத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள் டாக்டர் அசோக் தாவ்லே, மரியம் தாவ்லே உட்பட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

இக்கூட்டத்தில் சிவசேனா கட்சியின் சார்பில் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் காவலர்கள் வசந்த் வசவ்லா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.

நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர்கள், சிவசேனை-பாஜக கூட்டணி தங்களை ஏமாற்றி விட்டதாகக்கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணந்தனர். மேலும் அந்த தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெற்றிக்கு முழுமையாகப் பணியாற்றி உறுதி எடுத்துக்கொள்வதாகவும் கூறினார்கள்.

Comments are closed.