பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்!

0

மகாராஷ்டிராவின் சிவசேனா தலைவர் பக்வான் புல்சுந்தர், தலித் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மகாராஷ்டிராவின் சிவசேனா தலைவரும், முன்னால் மேயருமான பக்வான் புல்சுந்தரின் சகோதரர்கள் கனேஷ் புல்சுந்தர் மற்றும் மகேஷ் புல்சுந்தர் ஆகியோர், நிலப் பிரச்சனை காரணமாக ஒரு தலித் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதற்கு பக்வான் புல்சுந்தரும், அவருடைய சகோதரர் அருணும் உடந்தையாக இருந்ததாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து, கடந்த 12ஆம் தேதி இரவு பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, குற்றவியல் மற்றும் SC/ST கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இவர்கள் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.