ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும்: சீக்கிய அமைப்புகள்..!

0

இந்து ராஷ்டிரத்தை உருவாக்கும் திட்டத்தில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்யவேண்டும்’ என சீக்கிய மத அமைப்பான அகாலி தக்த் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த விஜயதசமியின் அன்று நடைபெற்றா நிகழ்ச்சியின் போது பேசிய தலைவர் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், இந்தியாவை ஒரு இந்துராஷ்டிரம் என அழைத்தார். மோகன் பகவத்தின் கருத்துக்கு தெரிவித்து அகாலி தக்த் தலைவர் கியானி ஹர்ப்ரீத் சிங் எதிர்ப்பு தெரிவிததுள்ளார்.

“இந்தியா ஒரு இந்துராஷ்டிரம் என்ற கருத்து கடும் கண்டனத்துக்குரியது. அரசியலமைப்பு அனைத்து குடிமக்களுக்கும் மத சுதந்திரத்தை வழங்கி உள்ளது.

2004ஆம் ஆண்டு அகாலி தக்த், ‘ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை அமைப்பான ராஷ்டிரிய சீக் சங்கதத்திடமிருந்து விலகியிருக்கும்படி’ சீக்கியர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்த்து சீக்கியர்கள் வீதிகளில் வந்து போராடினார்கள்.

காஷ்மீர் பெண்களை இனி திருமணம் செய்துகொள்ளலாம் என்ற பா.ஜ.க தலைவர்களின் கருத்துக்கு, அகாலி தக்த் எதிர்வினையாற்றியிருந்தது. இத்தகைய கருத்துக்கள் பெண்களை காட்சி பொருட்களாக்குகின்றன. காஷ்மீர் பெண்கள் எங்கள் சமூகத்தின் ஒரு பகுதி. அவர்களுடைய மரியாதையை காப்பது எங்களுடைய மதக் கடமை. காஷ்மீர் பெண்களின் மரியாதையைக் காக்க சீக்கியர்கள் முன்வர வேண்டும்” என கியானி தெரிவித்திருந்தார்.

Comments are closed.