தற்கொலைக்கு தூண்டிய அர்னாப்: அன்வயின் உறவினர்களை எதிர்க்கும் பாஜக

0

கட்டட உட்புற வடிவமைப்பாளர் அன்வய் நாயக் கடந்த 2018ஆம் ஆண்டில் தற்கொலை செய்துக்கொண்டார். அவரை தற்கொலை செய்ய தூண்டிய அர்னாப் மீது புகார் உள்ளது. இந்நிலையில் அன்வய்-க்கு அர்னாப் உள்பட 3 பேர் ரூ. 5.40 கோடி தராததால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அடுத்து இந்த வழக்கின் விசாரணைக்காக காவல்துறை அர்னாபை கைது செய்தனர். தற்கொலை சம்பவத்தில் அர்னாபுக்கு உருதுணையாக செயல்பட்ட மூவரை அலிபக் மாவட்ட நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட மூன்று பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

அர்னாப் கைது செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த பாஜக, இது அரசியல் நோக்கம்கொண்டது என்றும், பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்று விமர்சித்து வருகிறது.

பாஜகவின் விமர்சனத்துக்கு பதில் அளித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் பத்திரிகையில், “அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் செயல்பாடுகள் போல் பாஜகவின் செயல்பாடு இருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் பொய்ச் செய்திகளை பரப்பி, வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி ட்ரம்ப் நீதிமன்றத்தில் அமெரிக்க மாண்பைக் காக்க மனுத்தாக்கல் செய்துள்ளார். அதேபோல, மகாராஷ்டிராவில் பாஜக தலைவர்கள், தற்கொலை வழக்கில் சந்தேகத்திற்குரிய ஒரு நபர் கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

பிரதமர் மோடி, குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருந்தபோது கோத்ரா வன்முறை சம்பவம் நடந்தது. அப்போது பாஜக தலைவர்கள், குறிப்பாக இப்போது உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷா உள்பட பலர் மீது கலவரம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அப்போது அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டபோது, அது அரசியல் பழிவாங்கல், அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று பாஜக ஏன் கூறவில்லை. தற்கொலை செய்து கொண்ட அன்வே நாயக்கின் குடும்பத்தினரை அவமானப்படுத்தும் நோக்கில் பாஜகவினர் செயல்படுகிறார்கள்” இவ்வாறு அந்த பத்திரிகையில் குறிப்ப்டப்பட்டுள்ளது.

Comments are closed.