டெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது டெல்லி சிறப்புப் பிரிவு காவல்துறை தேசத்துரோக வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஜஃபருல் இஸ்லாம் கான் சமூக வலைதளத்தில் பதிந்த பதிவு மத உணர்வுகளை தூண்டுவதாக கூறி டெல்லி வசந்த் குஞ்ச் பகுதியை சேர்ந்த ஒருவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, இவ்வழக்கு டெல்லி சிறப்பு காவல்துறை சைபர் பிரிவுக்கு மாற்றப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் ஜஃபருல் கான் மீது கடந்த மாதம் 30ஆம் தேதி ஐ.பி.சி. பிரிவு 124(ஏ), 153(ஏ) ஆகிய இரு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை சைபர் பிரிவு விசாரித்து வருவதாக டெல்லி சிறப்புப் பிரிவு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளத்தில் கருத்து பதிந்ததற்காக சிறுபான்மை ஆணைய தலைவர் மீது தேசதுதோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜக மற்றும் இந்துத்துவ சங்பரிவார்கள் தொடந்து இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தியும், கொரோனா உட்பட பல தரப்பட்ட சம்பவங்களுக்கும் இஸ்லாமியர்கள் தான் காரணம் என்று சமூக வலைதளத்தில் தொடந்து பொய் கருத்துக்களை பரப்பி வருகின்றனர். மேலும் இதன் மூலம் மத கலவரங்களை நிகழ்த்தவும் முயற்சி செய்து வருகின்றனர்.
இந்த இந்துத்துவ வெறியர்களையெல்லாம் கைது செய்யாத காவல்துறை, சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.