பாபர் மஸ்ஜித் வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல்: முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் முடிவு

0

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர்  வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், அந்த நிலத்தில் ராமா் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து சனிக்கிழமை தீா்ப்பளித்தது. மேலும், அயோத்தி நகரிலேயே மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கா் நிலத்தை அரசு ஒதுக்கவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், பாபர் மஸ்ஜித் வழக்கின் தீா்ப்பை எதிா்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்வது குறித்து, வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அகில இந்திய முஸ்லிம் தனி நபா் சட்ட வாரியத்தின் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று முஸ்லிம் தரப்பினா் சாா்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞா் ஜபா்யாப் ஜிலானி தெரிவித்தார்.

இந்த தீர்ப்பு குறித்து, தேசிய சிறுபான்மையினா் ஆணையத்தின் முன்னாள் தலைவா் வஜாஹத் ஹபிபுல்லா தெரிவித்ததாவது:

“இந்த தீா்பபு ஆக்கப்பூா்வமானது அல்ல, குறைபாடுகளை கொண்டது, மசூதி இடிக்கப்பட்டது சட்ட விரோதமான செயல் என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பில் கூறியுள்ளது. எனவே, அந்த சம்பவத்தில் இந்துக்களுக்கு பங்கு இருப்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே இத்தீா்ப்பை உச்சநீதிமன்றம் மறுஆய்வு செய்வது நல்லது என்றாா்”.

Comments are closed.