மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது பற்றி சட்ட ஆலோசனை- வக்ஃபு வாரியம்

0

பாபர் மஸ்ஜித் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்வது பற்றி ஆலோசிக்கப்படும் என இந்த வழக்கில் உ.பி. சன்னி வக்ஃபு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞரும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் நிர்வாகியுமான ஜிலானி கூறியிருந்தார்.

மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்வது அவசியமா என்பது பற்றி அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் கூட்டம் 17ம தேதி நடைபெறுகிறது.

இது தொடர்பாக உத்தர பிரதேச மாநில மத்திய சன்னி வக்ஃபு வாரிய தலைவர் சுபர் பரூக்கி கூறியதாவது:

இந்த விவகாரத்தில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்வது பற்றி இப்போது நாங்கள் முடிவெடுக்க முடியாது. அது நீதிமன்ற அவமதிப்பாகி விடும்.

சட்ட ஆலோசனைக்கு பிறகே நிலத்தை ஏற்பது பற்றி முடிவெடுப்போம். இந்த வழக்கில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்திற்கு நேரடி தொடர்பு இல்லை. இருப்பினும் அதன் முடிவையும் நாங்கள் பரிசீலனை செய்வோம்’ எனக் கூறினார்.

Comments are closed.