அஸ்ஸாம் மாநில NRC தகவல்களை தொலைத்த பாஜக அரசு

0

வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறிய ஏராளமான மக்கள் அஸ்ஸாமில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களை கண்டறியும் விதமாக அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டது.

பல்வேறு எதிர்புக்களுக்கு மத்தியில் பாஜக அரசால் தொடங்கப்பட்ட குடிமக்கள் கணக்கெடுப்பு பணி  நிறைவடைந்து, மக்கள் அறிந்துகொள்வதற்காக அஸ்ஸாம் குடிமக்கள் பதிவேடு குறித்த விவரங்கள் அனைத்தும் உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படிருந்தது.

உள்துறை அமைச்சகத்தின் இணையத்தில் இருந்த அஸ்ஸாம் குடிமக்கள் பதிவேடு குறித்த விவரங்கள் அனைத்தும் மாயமாகியுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தின் ஒட்டுமொத்த தகவலையும் பாஜக அரசு தொலைத்துவிட்டதாக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தொழில்நுட்ப கோளாறு காரணமாக விவரங்களை பார்க்க முடியவில்லை. விரைவில் இணைய சர்வர் கோளாறு சரி செய்யப்படும்” என தெரிவித்துள்ளது.

ஒரு மாநிலத்தில் அனைத்து தகவலையும் தொலைத்துவிட்டு, சர்வர் கோளாறு காரணமாக மாநிலத்தில் விவரங்களை பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அலட்சியமாக பாஜக அரசு தெரிவித்துள்ளது. மாநிலத்தில் தகவல்களை பாதுகாக்க தெரியாத பாஜக அரசு எவ்வாறு நாட்டை பாதுகாக்கும் என்ற கேள்விகள் எழும்பியுள்ளது.

Leave A Reply