CAAக்கு எதிராக போராட்டம்: நெல்லையில் 12000 பேர் மீது வழக்குப்பதிவு

0

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தடைய மீறி தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர்.

அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்ட மக்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தடையை மீறி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதில் 7000 ஆண்கள் 5000 பெண்கள் என மொத்தம் 12 ஆயிரம் பேர் மீது இரு பிரிவுகளின் கீழ் பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 14ம் தேதி முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தின் போது பெண்கள், பெரியோர் என்றுக்கூட பாராமல் கடுமையாக தாக்குதலை காவல்துறையினர்  நடத்தினர். இதனால் டெல்லி ஷாகின் பாகில் நடைபெற்றுவரும் தொடர் போராட்டம் போல தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக இஸ்லாமிய இயக்கங்கள் அறிவித்தது. ஆனால் இப்போராட்டத்திற்கு தடை விதிக்ககோரி ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், இஸ்லாமிய அமைப்புகளின் சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு தடை விதித்தது.

ஆனால் தடையை மீறி சென்னை உட்பட பல மாவட்டங்களில் உயர்நீதிமன்றத்தின் தடையை மீறி அரசு அலுவலக முற்றுகை போராட்டம் நடந்தது. இதில், நெல்லையில் நடந்த போராட்டத்தில் 12,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.