உ.பி.யில் CAAக்கு எதிராக போராட்டம்: ரூ.23 லட்சம் அபராதம் விதித்த பாஜக அரசு

0

உத்தர பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் மாவட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்களுக்கு, பாஜக அரசால் 23 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பாஜக அரசின் மதவாத சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், உ.பி. மாநிலத்தில் போராட்டியவர்களுக்கு அபராதம் விதித்துள்ளது அம்மாநில பாஜக அரசு.

உத்தர பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில், போராட்டத்தில் ஈடுபட்ட 295 நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு,  மொத்தமாக 1.9 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது 53 பேரிடம் இருந்து அபராத தொகையாக 23 லட்சம் வசூலிக்க பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொது சொத்துக்களை சேதப்படுத்திய கணக்குகள் உயர்நீதிமன்ற பொறுப்பில் இருக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆனால் அலகாபாத் உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு சேதார கணக்குக்கான பொறுப்பினை விதிமுறைகளுடன் அளித்துள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் இந்த முடிவு மாநில பாஜக அரசு எதிர்ப்பார்த்துபோல நிறைவேற்றி உள்ளது. மேலும் இம்முடிவு அரசுக்கு ஆதரவான வழிவகையை செய்துள்ளது என சட்ட ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

உ.பி மாநிலம் கான்பூர் , முசாஃபர்நகர் போன்ற பகுதிகளில் போராட்டம் நடத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காவல்துறையினரால் தாகப்பட்டனர். மேலும் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது.

போராட்டத்தின்போது காவல்துறையே பொது சொத்துக்களை சேதப்படுத்திய விடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. மேலும் அனுமதியின்றி பொதுமக்களின் வீட்டிற்குள் சென்று பொருட்களை அடித்து நொறுக்கி, நகை, பணம் ஆகியவற்றையும் காவல்துறையினர் எடுத்துச்சென்றுள்ளனர். அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியான முறையில் போராடியவர்கள் மீது அபராதம் விதித்திருப்பது சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துயுள்ளது.

Comments are closed.