ஜேஎன்யு மாணவர்கள் முற்றுகை போராட்டம்: 6 மணிநேரம் சிக்கிய பாஜக அமைச்சர்

0

ஜே.என்.யு பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை (நேற்று) நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக பாஜக தலைவரும், குடியரசுத் துணைத்தலைவர் வெங்கயா நாயுடு கலந்து கொண்டார்.

மேலும் சிறப்பு விருந்தினராக பாஜகவின் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் கலந்து கொண்டார்.

விடுதிக் கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்னிறுத்தி, பட்டமளிப்பு விழா நடைபெறும் ஏஐசிடிஏ அரங்கம் நோக்கி திங்கள்கிழமை பேரணி நடத்தப்படும் என்று ஜே.என்.யு மாணவர் சங்கம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தது.

அதன்படி, பேரணியாக புறப்பட்ட மாணவர்களை, காவல்துறையினர் மாணவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் தடையை மீறி மாணவர்கள் டெல்லி காவல்துறைக்கு எதிராகவும், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமாருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியவாறு ஏஐசிடிஏ அரங்கம் நோக்கி பேரணியை தொடர்ந்தனர்.

குடியரசுத்துணை தலைவர் வெங்கய நாயுடு, பேரணி காரணமாக அரங்கை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் வெளியேற முயன்றபோது மாணவர்கள் தொடர்ந்து முற்றுகையிட்டனர்.

இதனால் ரமேஷ் பொக்கிரியால் வெளியேற முடியாமல் மட்டிக்கொண்டார். பின்னர் பேச்சுவார்த்தைக்குப்பின் மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தபிறகே அமைச்சரை வெளியேறாவிட்டனர்.

Comments are closed.