“நான் நிதி அமைச்சரானால் பிரதமர் பதவியை கேட்பேன் என அச்சப்படுகிறார்கள்”- சுப்ரமணிய சுவாமி

0

சென்னையில் நடைபெற்ற தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ’THINK EDU CONCLAVE’ என்ற நிகழ்ச்சி கலந்துக்கொண்ட பாஜக மூத்த தலைவரான சுப்ரமணிய சுவாமி பேசியதாவது:

“ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு பைத்தியக்காரர். அவர் வட்டி விகிதங்களை அதிகரித்தார். பல சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூடப்படுவதற்கு காரணம் ரகுராம் ராஜன் தான்.

பொருளாதாரம் என்பது ஒரு மிகப்பெரிய பிரிவு. அதில் ஒரு துறை மற்ற துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் ஜே.என்.யூ சென்றால் அதில் பட்டம் பெறலாம். ஆனால் எதையும் கற்றுக்கொள்ள முடியாது.

பிரதமருக்கு பொருளாதாரம் புரியவில்லை என்பதால் அவர் என்னை நிதி அமைச்சராக்க வேண்டும். ஆனால் நான் ஒரு பொருளாதார நிபுணர் மட்டுமல்ல, நான் ஒரு அரசியல்வாதியும் கூட. எனவே நிதியமைச்சர் பதவியில் நான் நன்றாக செயல்பட்டால் அடுத்து பிரதமர் பதவி கேட்பேன் என கட்சியினர் பயப்படுகிறார்கள்” என தெரிவித்தார்.

சுப்ரமணிய ஸ்வாமியின் இந்த பேச்சு பாஜகவினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply