மதரீதியில் துன்புறுத்திய சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை!

0

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ஃபாத்திமா லத்தீப் சென்னை ஐஐடியில் முதுகலை முதலாம் ஆண்டு HUMANITIES மானுடவியல் படித்து வந்தார். இவர் கடந்த 9ஆம் தேதி ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் தற்கொலை செய்துக்கொணார்.

ஐஐடி கல்லூரி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன், மாணவி ஃபாத்திமாவை மத ரீதியில் துன்பபுறுத்தியதால் தற்கொலை செய்துக்கொண்டார். இதனால் பல்வேறு தரப்பிரனுரும் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடமும் அவரது பெற்றோர் புகார் தெரிவித்ததை அடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட சில பேராசியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஃபாத்திமாவின் தந்தை லத்தீஃப் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழநிச்சாமி மற்றும் டிஜிபி ஆகியோரை சந்தித்து மனு அளித்தார். பின்னர் எதிர்க்கட்சி தலைவரும், தீமுக தலைவருமான மு.க. ஸ்டாலினையும் லத்திஃப் சந்திதார்.

இந்த நிலையில், மதரீதியில் துன்புறுத்திய பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் ஐ.ஐ.டி வளாகத்தை விட்டு வெளியேறக்கூடாது என்று சிசிபி போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

Comments are closed.