வேளாண் சட்டம்: பாஜக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த உச்சநீதிமன்றம்

0

புதிய வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்திவைக்க தயாரா என மத்திய பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து கடந்த 50 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பல முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ள இப்போராட்டம் தொடர்பான பொதுநல மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய பாஜக அரசு மீது தனது கடும் அதிருப்தியை உச்சநீதிமன்றம் காட்டியது.

வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பாஜக அரசு தயார் என்றால் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தாமாக முன்வந்து ஒரு முடிவை எடுக்காவிட்டால் நீதிமன்றம் முடிவெடுக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.

இதனிடையே விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு இதுவரை ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து ஒரு முடிவை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு நல்லது என இதுவரை ஒருவர் கூட மனு தாக்கல் செய்யாததையும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்து பாஜக அரசுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.