நீதிமன்றம் சென்றால் எந்த பலனும் கிடைக்காது -பாபர் மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பரபரப்பு கருத்து

0

பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய நிலம் இந்து தரப்புக்கு சொந்தம் என்று தலைமை நீதிபதியக இருந்த ரஞ்சன் கோகோய் தீர்ப்பளித்தார். பின்னர் ஒய்வுபெற்ற கோகோய்க்கு மாநிலங்களவை எம்.பி. பதிவையை பாஜக வழங்கியது.

இந்நிலையில், இந்தியா டுடே பத்திரிகை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ரஞ்சன் கோகய் பங்கேற்றார். அங்கு அவர் அளித்த பேட்டியில், “நீதிமன்றத்திற்கு ஒரு வழக்குக்காகச் சென்றுவிட்டால் ஏன்தான் நீதிமன்றத்துக்கு வந்தோம் என கூறும் அளவுக்கு மக்கள் வேதனைப்படுகிறார்கள். நீதிபதிகள் நியமனம் விரைவாக நடைபெறவில்லை என்றார்.

இதற்கு உடனடியாகத் தீர்வு கண்டு, செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என பேசிய அவர், நீதிபதிகளைத் தேர்வு செய்வதிலும், பயிற்சி அளிப்பதிலும் மாற்றம் கொண்டுவருவது அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். நீதிமன்றத்துக்குச் சென்றால் வேதனைப்பட வேண்டியது இருக்கும் எனவும் அவர் கூறியிருக்கிறார். ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இவ்வாறு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.