நீதித்துறைக்கு சவக்குழி தோண்டப்பட்டுள்ளது –உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்

0

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, இருசக்கர சொகுசு வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் அமர்ந்திருந்த படம் ஒன்று வெளியானது. இதனை தமது சமூக வலைதள பக்கத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் விமர்சித்து பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கு விசாரணையின் போது, தான் தெரிவித்த கருத்துக்காக மன்னிப்பு கேட்க, பிரசாந்த் பூஷன் மறுத்தார். இதையடுத்து, அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. அத்துடன் அவருக்கான தண்டனை குறித்து அறிவிக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பிரசாந்த் பூஷன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமையன்று ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், “பிரசாந்த் பூஷன் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார். அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. ஆகையால் தண்டனை தொடர்பான இன்றைய விவாதங்களை ஒத்திவைக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர் கவாய் மற்றும் கிருஷ்ணா முராரி அடங்கிய நீதிபதிகள் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. இதில் தான் தெரிவித்த கருத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என, பிரசாந்த் பூஷன் கூறியுள்ளார். அந்த கருத்தை, அவர் திரும்ப பெறும் வரை, கோரிக்கையை ஏற்க முடியாது. அவரது கருத்தும், அதை தெரிவித்த விதமும், மிக மோசமானது. தான் தெரிவித்த கருத்துக்காக மன்னிப்பு கேட்கும் வரை, இந்த விவகாரத்தில், அவர் மீது கருணை காட்டப் போவது இல்லை என்று நீதிபதிகள் கூறினர். பின்னர் பிரசாந்த் பூஷனின் கோரிக்கை மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர்.

தனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பின் படியே, நாங்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளோம். அதில் நீதித்துறைக்கு சவக்குழி தோண்டப்பட்டுள்ளது. பேச்சுரிமை, கருத்துரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற விதிகள் 2013ன் படி, இந்த தீர்ப்பு வந்ததில் இருந்து 30 நாட்களுக்குள் நாங்கள் மனுத்தாக்கல் செய்துள்ளோம். 21 ஆவது பிரிவின் கீழ் ஒரு குடிமகனின் சுதந்திரத்தைப் பாதுகாப்பது தொடர்பான அடிப்படை பொதுக் கொள்கையின் பார்வையில் நீதியின் நலன்களுக்காக முதல் முறையீடு விஷயத்தில் மறுஆய்வு விண்ணப்பமாக கருதப்படும் என்று பூஷன் குறிப்பிட்டுள்ளார்.

கோர்ட் அவமதிப்பு வழக்கில், பிரசாந்த் பூசனுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பார் கவுன்சிலை சேர்ந்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட நாடு முழுவதிலும் இருந்து 1500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

“பிரசாந்த் பூஷன் வழக்கில் நீதியின் கருச்சிதைவை நிறுத்துங்கள் என்று ஒரே குரலாக தெரிவித்துள்ளனர். கோர்ட் அவமதிப்பு அச்சுறுத்தல் நிகழ்ந்துள்ள நிலையில், பார் கவுன்சில் அமைதி காத்துக்கொண்டிருப்பது, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் வலிமை, மதிப்பு உள்ளிட்டவைகளை குறைத்து மதிப்பிட வழிவகுக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Comments are closed.