பாஜக-காரரின் பைக்-ஐ விதிகளை மதிக்காமல் ஓட்டிய தலைமை நீதிபதி பாப்டே

0

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏஸ்.ஏ.பாப்டே ஹார்லி டேவிட்சன் பைக்கில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் வெளியிடுள்ள பதிவில், “நாக்பூர் ராஜ் பவனில் பா.ஜ.க. தலைவருக்கு சொந்தமான 50 லட்சம் மதிப்புடையை பைக்கில் முகமூடி, ஹெல்மெட் அணியாமல் சி.ஜே.ஐ பாப்டே வலம் வருகிறார். ஊரடங்கு நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் குடிமக்களுக்கு நீதி அணுகுவதற்கான அடிப்படை உரிமையை மறுக்கிறார்” என விமர்சித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏஸ்.ஏ.பாப்டேவின் புகைப்படம் வெளியான நிலையில், அவர் ஹார்லி டேவிட்சன் பைக்கில் அமர்ந்திருந்திருந்தார். இந்த பைக் நாக்பூரை சேர்ந்த பா.ஜ.க. தலைவரான சோன்பா முசாலேவின் மகன் ரோஹித் சோன்பாஜி முசாலே பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மக்களுக்கு நீதி வழங்கக்கூடிய நீதிபதியே பா.ஜ.க.வினருடன் நெருக்கமாக இருப்பதையும் அவர்களது பைக்கில் இருந்தபடி இருக்கும் புகைப்படத்திற்கு கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

Comments are closed.