கொரோனா காலத்தில் மக்கள் நலனில் கவனம் செலுத்ததவும் -பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

0

நாட்டில் சொரோனா நோயால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், வணிகத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், மக்கள் நலனிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய பாஜக அரசிடம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடன் பெற்றவர்கள், அதற்கான அசலையும், வட்டியையும் செலுத்த முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் மார்ச் மாதம் ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டது.

அதில் வங்கியில் பெற்ற கடன் மற்றும் இ.எம்.ஐ தொகையைத் தாமதமாகச் செலுத்தலாம் என்று அறிவித்தது. ஆகஸ்ட் 31வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், கடன் தொகை செலுத்துவதற்கான கால அவகாசமும் அதுவரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் இந்த காலகட்டத்திற்கான வங்கிக் கடன் தவணைக்குத் தளர்வு அளித்துவிட்டு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக பல்வேறு தொழில்த்துறை நிறுவனங்கள், தனி நபர்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், “வங்கிக்கடன் விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் பின்னால் ஒளிந்து கொள்வதையே மத்திய பாஜக அரசு வழக்கமாகி உள்ளது. வட்டிக்கு வட்டி வசூல் செய்வது ரிசர்வ் வங்கியின் முடிவு என்று மத்திய அரசு தப்பித்து கொள்ள முடியாது.

கொரோனா பரவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், வணிகத்தின் மீது மட்டும் அக்கறை செலுத்தாமல் மக்கள் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும். மத்திய அரசு அறிவித்த பொது முடக்க நடவடிக்கையால் தான் இந்த பிரச்சினை ஏற்பட்டது. எனவே வட்டி வசூலிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு சுயமாக முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்

இந்த வழக்கில் ஒரு வாரத்தில் மத்திய அரசு தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Comments are closed.