சுஜித் உயிரிழப்பு: அதிமுக அரசு மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

0

சுஜித் உயிரிழப்புக்கு காரணமான தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ஆழ்துளை குழாய்கள் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க 2010ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வெளியிட்ட வழிகாட்டிமுறைப்படி  தமிழக அரசு செயல்படுத்தி இருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என கூறப்பட்டுள்ளது.

ஆனால், அதன் பின்னர் தமிழகத்தில் மட்டும் உது போன்று 13 உயிரிழப்புகள் நடந்திருப்பதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தடுக்க மாநில அரசுகளும் இதுவரை எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.