அஸ்ஸாமில் பூர்வீக முஸ்லீம்களை அடையாளம் காண கணக்கெடுப்பு

0

வங்காளதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறிய ஏராளமான மக்கள் அஸ்ஸாமில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களை கண்டறியும் விதமாக அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டது.

ஆனால் அந்த தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இந்தியாவை சேர்ந்த பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பெயர் இல்லாததால் பாஜக அரசு அவர்களை தடுப்புக்காவலில் வைத்துள்ளது. மேலும் பல இந்துக்கள் பெயர்களும் என்.ஆர்.சியில் விடுபட்டதால், கணக்கெடுப்புகள் தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் அஸ்ஸாமில் வாழும் உள்நாட்டு முஸ்லிம்களை கணக்கெடுக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அங்கு வாழும் கோரியா, மோரியா, தேசி மற்றும் ஜோலா ஆகிய 4 இனங்கள் மட்டடும் உள்நாட்டு குடிமக்களாக கருதப்படுகின்றனர். எனவே அவர்களை கணக்கெடுக்க பாஜக அரசு முடிவு செய்துள்ளது.

Comments are closed.