பாலியல் கொடுமைக்குள்ளான மாணவி மீது குண்டர் சட்டம்: சுவாமி சின்மயானந்தா கடிதம்

0

தன் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்த மாணவி மீது குண்டர் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யக்கோரி, காவல்துறைக்கு பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தா கடிதம் எழுதியுள்ளார்.

உ.பியில் சுவாமி சின்மயானந்தின் சார்பில் நடத்தப்படும் சட்டக் கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவர், சின்மயானந்தா ஒரு ஆண்டாக தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகப் புகார் தெரிவித்தார்.

இதனிடையே, ரூ.5 கோடி பணம் கேட்டு மிரட்டியதாக அந்த மாணவி மற்றும் அவரது நண்பர்கள் மீது சின்மயானந்தா புகார் கொடுத்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், அந்த மாணவியை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைது செய்தனர்.

காவல்துறை கண்காணிப்பாளருக்கு சின்மயானந்தா கடிதம் எழுதியுள்ளார். அதில், மாணவியின் நண்பர் சச்சின், எனது வீட்டிற்கு வந்து ரூ.5 கோடி பணம் தராவிட்டால், பொய் வழக்கு தொடருவோம் என்று என்னை மிரட்டினார்.

இந்நிலையில் மாணவி மற்றும் அவரது நண்பர்களுக்கு எதிராக குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று சின்மயானந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.