சுவிஸ் வங்கி கணக்கு பட்டியலை இந்தியாவிடம் வழங்கியது சுவிட்சர்லாந்து அரசு!

0

வரி செலுத்துவதில் இருந்து தப்புவதற்காக சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் பலர் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை பதுக்கிவைத்துள்ளனர்.

இந்நிலையில் சுவிட்சர்லாந்து அரசுடன் இந்திய அரசு, பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கருப்பு பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்களின் விவரங்களை வழங்க சுவிஸ் வங்கிகள் ஒப்புதல் அளித்தன.

தற்போது செயல்பாட்டில் உள்ள கணக்கு விவரங்கள் மற்றும் கடந்த 2018ஆம் ஆண்டில் முடித்துவைக்கப்பட்ட கணக்குகளின் விவரங்களின் முதல் பட்டியலை சுவிட்சர்லாந்து அரசு தற்போது இந்தியாவிடம் வழங்கியுள்ளது. மேலும் 2020 செப்டம்பர் மாதத்தில் இரண்டாவது பட்டியலை வழங்க உள்ளது.

Comments are closed.