சிரியாவில் இட்லிப் பகுதியில் இராணுவப் படைகள் நடத்திய தாக்குதலில் 51 பேர் பலியாகினர்.
இதுகுறித்து சிரியாவில் உள்ள கண்காணிபுக் குழு தெரிவித்ததாவது, நாட்டு மக்களின் கட்டுப்பாட்டு பகுதியான இட்லிப் மாகாணத்தில் கடந்த ஒரு மாதமாக ரஷ்ய ஆதரவுடன் ராணுவப் படைகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்தகடுமையான தாக்குதலில் குழந்தைகள் உட்பட 50க்கு மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியுள்ளதாக தெரிவித்தது
இந்த உள்நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர். லட்சகணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.