தப்லீக் ஜமாத் குறித்து பொய் செய்தி வெளியிட்ட ஊடகங்களை பாதுகாக்கிறதா பாஜக அரசு?

0

கொரோனா நோய்த் தொற்றுப் பரவலுடன் தப்லீக் ஜமாத் மாநாட்டை தொடர்புபடுத்தி ஊடகங்களில் செய்தி வெளியிடுவதற்குத் தடை விதிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிய வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்திற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து, தொலைக்காட்சிகளில் இதுபோன்ற செய்taதிகளைக் கண்காணிப்பதற்கு ஓர் அமைப்பை ஏற்படுத்துவது குறித்து அரசுபரிசீலிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் கடந்த மார்ச் மாதம் தப்லீக் ஜமாத் அமைப்பின் மாநாட்டில் பங்கேற்ற இஸ்லாமியர்களாஅல்தான் பலருக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டதாக சில விஷம  ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்நிலையில், “இதுபோன்று பொய்ச் செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் நிறுத்தவும், இதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி ஜாமியத் உலமா-இ-ஹிந்த் உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு சார்பில் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதுதொடர்பான விசாரணையின்போது அந்தப் பதில் மனுவில் திருப்தியடையாத உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி மத்திய அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கேபிள் டிவி நெட்வொர்க் சட்டத்தின் கீழ் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதுதொடர்பான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை (நேற்று) விசாரணை நடைபெற்றது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அப்போது பிரமாணப் பத்திரத்தில் உச்சநீதிமன்றம் கேட்ட தகவல்கள் இல்லை என தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

அது குறித்து நீதிபதி கூறியதாவது: மத்திய அரசு அளித்துள்ள பதிலில் எங்களுக்கு திருப்தியில்லை. கேபிள் டிவி நெட்வொர்க்கின் செய்திகளைக் கட்டுப்படுத்த கேபிள் டிவி நெட்வொர்க் சட்டத்தின் கீழ் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்பதை நீங்கள் தெரிவிக்க வேண்டும் என விரும்பினோம். ஆனால் அதுகுறித்த தகவல்கள் இல்லை. தொலைக்காட்சிகளில் இதுபோன்ற பொய்ச் செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் நிறுத்தவும்,  செய்திகளைக் கையாள்வதற்கான வழிமுறை என்ன என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். அவ்வாறு ஒழுங்குமுறை அமைப்பு இல்லாவிட்டால், அதனை உருவாக்கி மத்திய அரசு கண்காணிக்க வேண்டும்.

பின்னர் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை 3 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Leave A Reply