“தாஜ் மஹால்” பெயரை ராம் மஹால் என பெயர் மாற்ற யோகி ஆதித்யநாத் திட்டம்

0

இந்தியாவின் வட மாநிலங்களைப் பொறுத்தவரை முகலாய அரசர்களின் நினைவாக ஏராளமான நினைவுச் சின்னங்கள் இருக்கின்றன.

அதில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உலக அதிசயங்கள் ஒன்றான தாஜ் மஹால் உள்ளது. முகலாய பேரரசர் ஷாஜகான் தனது மனைவிக்காக கட்டினார்.

தற்போது இந்த தாஜ் மஹாலின் பெயர் ராம் மஹால் என மாற்றப்படும் என பாஜக எம்எல்ஏ கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பைரா தொகுதி எம்எல்ஏவான சுரேந்திர சிங், தாஜ் மஹால் இருந்த இடத்தில் ஏற்கெனவே இந்துக் கடவுளான சிவன் கோயில் இருந்ததாகவும், அதை இடித்துவிட்டே ஷாஜகான் தாஜ் மஹாலை கட்டியதாகவும் கூறியிருக்கிறார்.

ஆகவே ஆக்ராவின் நினைவுச்சின்னமான தாஜ் மஹாலுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் விரைவில் வேறு பெயரைச் சூட்டுவார் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு ஆக்ராவிலுள்ள ஒரு முகலாய அருங்காட்சியகத்துக்கு சத்ரபதி சிவாஜி பெயரை மாற்றினார் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். அதேபோல உத்தரப் பிரதேச மாநிலத்தின் முக்கிய மாவட்டங்களான அலகாபாத், ஃபைசாபாத்துக்கு முறையே பிரக்யராஜ், அயோத்யா என பெயர் மாற்றினார். அதேபோல ஆக்ரா விமான நிலையத்திற்கு தீன்தயாள் உபத்யாய் என்றும், உருது பஜாருக்கு இந்தி பஜார் என்றும், அலி நகருக்கு ஆர்யா நகர் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.