தாஜ்மகாலில் காவிக் கொடி: ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்பினர் கைது

0

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இந்து ஜக்ரான் மஞ்ச் என்ற கும்பல் ஒன்று தாஜ்மஹகாலில் காவிக் கொடி பிடித்தப்படி, விடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.

உலக புகழ்பெற்ற சுற்றுலா சின்னமாகவும், கட்டடக் கலையின் அதிசயமாகவும் இருக்கும் தாஜ்மகால் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் அப்பாதுகாப்பை மீறி உள்ளே புகுந்து, இந்துத்துவா கும்பல் காவிக் கொடியுடன் வீடியோ வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தற்போது இந்து ஜக்ரான் மஞ்ச்சை சேர்ந்த கவுரவ் தல்வார், ரிஷி லவானியா, சோனு பகேல், விஷேஷ் குமார் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கவுரவ் தல்வார், இந்து ஜக்ரான் மஞ்ச் அமைப்பின் மாவட்டத் தலைவர் என தெரியவந்துள்ளது.

இவ்விவகாரத்தில் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை அளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153ஏ, குற்றவியல் திருத்தச் சட்டம் பிரிவு 7 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.