தடையை மீறி ஊர்லம்: பாஜக அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

0

பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை மீது பழனி நகர காவல்துறை 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு கடந்த 6 மாத காலமாக அமலில் இருந்தது. இருப்பினும் கடந்த மாதம் முதல் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. இருப்பினும் பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூட கூடாது என்று காவல்துறை எச்சரித்தது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடந்த பாஜக ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தடையை மீறி ஊர்வலம் சென்றதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள பழனி நகர காவல்துறை, பாஜக மாவட்ட தலைவர் கனகராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply