அமித்ஷா என்ன தீவிரவாதியா? எல். முருகனுக்கு கே.எஸ். அழகிரி கேள்வி

0

உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 21ஆம் தேதி தமிழகம் வருகிறார். அரசு நிகழ்சிகளில் கலந்துகொள்ளும் அவர், பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திலும் கலந்துகொள்ள உள்ளார்..

இதுதொடர்பாக நேற்று பேசிய மாநிலபாஜக தலைவர் எல். முருகன், அமித்ஷா-வின் வருகை எதிர்க் கட்சியினருக்கு பயத்தை கொடுக்கும் என்று கூறினார்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி,  “அமித் ஷா என்ன தீவிரவாதியா அவரைப் பார்த்து பயம் ஏற்பட? அவர் கையில் ஏ.கே 47 ரக துப்பாக்கியுடனா வரபோகிறார்? ஜனநாயக நாட்டில் யாரை பார்த்தும் யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. தமிழ் மண்ணில் அமித்ஷா-வை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும். தமிழகத்தில் யாரும் பயப்படமாட்டார்கள். பாஜக மாநில தலைவர் எல். முருகன் கற்பனையில் வாழ்கிறார். அவரை நிஜ உலகத்திற்கு வரச்சொல்லுங்கள்” என்று அழகிரி தெரித்தார்.

Comments are closed.