சென்னையில் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் பிரச்சனையில் ஈடுபட்ட பாஜகவினர் கைது

0

சென்னை திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ் பகுதியில் அபூபக்கர் என்பவர் உணவகம் நடத்தி வருகின்றார். இந்த கடைக்கு நேற்று முன்தின இரவு 11.30 மணியளவில் சிக்கன் ஃப்ரைட் ரைஸ் வாங்குவதற்காக மூன்று பேர் வந்துள்ளனர். சாப்பாட்டை வாங்கி விட்டு கடைக்காரர் அதற்கான பணத்தை கேட்டபோது வந்திருந்த மூவரும் கடை ஊழியர்களிடம், எங்களிடமே பணம் கேட்கிறாயா? நாங்கள் மூவருமே பாஜக கட்சிக்காரகள் எனக் கூறி மத கலவரம் செய்ய ஈடுபடுள்ளனர்.

இந்த நிலையில் கடையில் மூவர் பிரச்சனை செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் மதுபோதையில் இருக்கும் நபர், “தான் பிஜேபி கட்சியைச் சேர்ந்தவன் என்றும், கலவரம் ஆகிவிடும் என்றும், பிஜேபி ஆள் என மரியாதை இல்லையா? அமித்ஷாவின் பிஏவுக்கு போன் செய்யவா என்று வீடியோவில் மிரட்டி பேசியுள்ளார். இதனையடுத்து கடை உரிமையாளர் அபூபக்கர் கொடுத்த புகாரின் பேரில் ஐஸ்ஹவுஸ் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் மதுபோதையில் பிரச்சனையில் ஈடுபட்டது பாஜக திருவல்லிக்கேணி மேற்கு தொகுதி செயலாளர் பாஸ்கர், பாஜக திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் புருஷோத்தமன் மற்றும் பாஜக கட்சியை சேர்ந்த சூர்யா என்பது தெரியவந்தது.

இதனையடுத்து பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், தனி நபரை தாக்குதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாஸ்கர் மற்றும் புருஷோத்தமன் ஆகிய இரு பாஜக நிர்வாகிகளையும் காவல்துறையினர் கைது செய்ரது சிறையில் அடைத்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 2019-இல் இலங்கை தூதரகத்தை தாக்கிய வழக்கு, விநாயகர் ஊர்வலத்தில் கலவரம் ஏற்படுத்த முயற்சித்த வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

 மேலும் தலைமறைவாக உள்ள பாஜக கட்சியை சேர்ந்த சூர்யா என்பவரை தேடி வருகின்றனர். ஒரு வாரத்திற்கு முன்பாக பாஸ்கரனும் புருஷோத்தமனும் இதே ஹோட்டலுக்கு வந்து ரூ.850-க்கு சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் ஏமாற்றி சென்றதாகவும் கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply