பாஜகவின் யாத்திரைக்கு அனுமதி வழங்க கூடாது: டிஜிபி அலுவலகத்தில் மனு

0

நவம்பர் 6ஆம் தேதி முதல் வெற்றிவேல் என்ற யாத்திரையை ஆரம்பிக்க இருப்பதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பாஜகவின் இந்த யாத்திரைதமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்.முருகனின் இந்த யாத்திரைக்கு ஏற்கனவே அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மதத்தை வைத்து அரசியல் செய்து வருவதாகவும் குற்றாச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் இந்திய தேசிய லீக் கட்சி டிஜிபி அலுவலகத்தில் எல்.முருகன் நடத்தும் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மனு அளித்துள்ளது. எல்.முருகன் அவர்களின் வெற்றிவேல் யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செயல்பட்டு வருகிறார். இதனால் இந்தயத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று இந்திய தேசிய லீக் கட்சி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

Comments are closed.