எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை கண்டு கொள்ளாமல் கடந்து சென்ற பொதுமக்கள்: அதிமுகவினர் அதிர்ச்சி

0

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை கண்டுக்கொளாமல் மக்கள் சென்றதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல்  இன்னும் ஓரிரு மாதங்களில் நடக்கவுள்ள நிலையில் ஆளும் கட்சியான அதிமுகவும், எதிர்கட்சியான திமுகவும்  பரபரப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் அருகே வாகனத்தில் முதல்வர் பழனிசாமி உரையற்றினார்.

ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை கொஞ்சமும் கண்டுக்கொள்ளாமல் மக்கள் அலைஅலையாய் அவரது பிரச்சார வாகனத்தை கடந்து சென்றனர். அதிமுக தொடர்ச்சியாக வென்ற பல்லடத்தியிலேயே முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சை மக்கள் பொருட்படுத்தாமல் கலைந்து சென்றதால் அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Comments are closed.