தமிழகத்தில் பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதியில்லை -தமிழக அரசு

0

தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை பாஜக நடத்த இருந்த வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் வேல் யாத்திரையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்க இருந்தனர்.

இந்த நிலையில், சட்டம் – ஒழுங்கு பிரச்சனை என கூறி பாஜகவின் வேல் யாத்திரிகைக்கு தடை கோரி சென்னையை சேர்ந்த செந்தில் குமார், பாலமுருகன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு, மருத்துவர்கள் உள்ளிட்டோர்களின் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும். இத்னால் கொரோனா பரவலும் அதிகரிக்கும் என்றும் யாத்திரை முடியும் நாளான டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இதையடுத்து பாஜக வேல் யாத்திரைக்கு தடை கோரிய மனுவை அவசர வழக்ககாக இன்று விசாரிக்கப்பட்டது. அதில் தமிழகத்தில் நாளை தொடங்க உள்ள பாஜகவின் வேல்யாத்திரைக்கு அனுமதியில்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. யாத்திரை நடத்தினால் கொரோனா பரவலும் அதிகரிக்கும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த முடிவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உட்பட பல அரசியல் தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளார்.

Comments are closed.