‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’: உற்சாகத்தில் வடமாநிலத்தவர்கள்; சோகத்தில் தமிழர்கள்!

0

தமிழகத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலுக்கு வருவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகம் முழுவதும் அமலாக உள்ளது. தமிழக சட்டப்பேரவையின் இன்றைய விவாதத்தில் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேசும் போது, ‘வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குடும்ப அட்டை வைத்திருப்போர் எங்கு வேண்டுமெனாலும் ரேசன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்” என அமைச்சர் காமராஜ் பேசினார்.

‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’ திட்டம் கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 12 மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதிக்குள் நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.