பாஜக எங்கு போட்டியிட சொல்கிறதோ அங்கு போட்டியிட தயார்- தமிழிசை

0
பாஜக தலைமை என்னை எங்கு போட்டியிட சொல்கிறதோ அங்கு நான் போட்டியிடுவேன் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்ளுக்கு பேட்டியளித்த தமிழிசை, தமிழகத்தில் 5 தொகுதிகளிகளில் பாஜக போட்டியிட உள்ளது. இதில் நான் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்று பாஜக தலைமை தான் முடிவு செய்யும். வேட்பாளரை தேர்வு செய்யும் பொறுப்பு பாஜக தலைவர் அமித் ஷாவிடம் தான் உள்ளது. ஆகையால் பாஜக தலைமை என்னை எங்கு போட்டியிட சொல்கிறதோ அங்கு நான் போட்டிட்யிட தயார். நான் எங்கு போட்டியிட்டாலும் பாஜகவுக்கு வெற்றியை கண்டுப்பாக தேடி தருவேன். மேலும் பாஜக தலைமை எடுக்கும் முடிவே இறுதியானதாகும் என்று தமிழிசை தெரிவித்தார்.

Comments are closed.