விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் மீது பாஜக பெண் உறுப்பினர் பாலியல் புகார்

0

விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி. கலிவரதன் மீது பாஜகவை சேர்ந்த காயத்ரி என்பவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

புகாரளித்த காயத்ரி விழுப்புரம் மாவட்ட பாஜக மகளிர் அணி பொதுச்செயலாளராக உள்ளார்.  மாவட்ட மகளிர் அணி தலைவர் பதவி வழங்குவதாக கூறி கலிவரதன் ரூ.5 லட்சம் மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டியுள்ளனர். அத்துடன் இங்கு நடப்பதை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாக காயத்ரி குற்றம்சாடியுள்ளார்.

இந்நிலையில் பாஜக மாவட்ட தலைமை மீது மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் காயத்ரி  பாலியல் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என காயத்ரி பாஜக தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.