உ.பி-யாக மாறிய தமிழகம்: அராஜகத்தில் ஈடுபட்ட காவல்துறை

0

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லிஷாகின் பாக் பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஷாகின் பாக்கில் ஆயிரக்கணக்கானோர் இரவு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சில நாட்களுக்கு முன் அவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி துப்பாக்கிச்சூடு நடத்தினான். ஆனால் அவனை காவல்துறையினர் தடுக்காமல் கைக்கட்டி வேடிக்கை பார்த்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தாகக்குதலும் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் நேற்றைய தினம் மாலை முதல் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகவும், இம்மூன்றையும் கண்டித்து தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், அமைதியான வழியில் மக்கள் போராட்டம் நடத்தினர்.

நூற்றுக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டு, அமைதியாக இருந்த பொதுமக்கள் மீது, எந்த விதக்காரணமுமின்றி, தடியடிப செய்து அராஜகம் செய்துள்ளார்கள். பெண்களின் பாதுகாப்புக்காக நின்றிருந்தவர்களை தரதரவென இழுத்துச் சென்று கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றியுள்ளனர். இதில் ஒருவர் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டதுடன் ஒருவர் உயிரிழந்தும் உள்ளார்.

வண்ணாரப்பேட்டையில் நடந்த இந்த தாக்குதலை கண்டித்து தமிழக முழுவதும் நடுஇரவில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் பல இடங்களில் தற்போதுவரை தொடர் போராடாம் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்த உலமா சபையின் அறிக்கையில் , “அமைதி வழியில் போராடிய பெண்கள் மீது காவல்துறை கண்ணியமற்ற முறையில் நடந்தது கடும் கண்டனத்துக்குரியது. மேலும் தடியடி நடத்திய காவல்துறை மீது அரசு துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் கருப்புச் சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.

காவல்துறையின் இந்த அராஜகத்தை கண்டித்து ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, “மத்திய பா.ஜ.க அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது திட்டமிட்டு கடும் தாக்குதல் நடத்திய எடப்பாடி அரசின் காவல்துறைக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு; கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு அவர்கள் மீதான அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply