பாஜகவுக்கு எதிரான கட்சிகளை அணி திரட்டி மாநாடு நடத்துவேன் -சந்திரசேகர் ராவ்

0

பாஜக அரசிற்கு எதிரான கட்சிகளை அணி திரட்டுவேன் என தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவின் ஐதரபாத் மாநகராட்சித் தேர்தல் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இரண்டு தினங்க்களுக்கு முன் நடந்த கூட்டத்தில் பேசிய சந்திரசேகர் ராவ்:

“ரயில் நிலையத்தில் நான் தேநீர் விற்றேன் என கூறிய மோடி தற்போது ரயில் நிலையத்தை விற்கிறார். பொதுப் பணித்துறைகளின் பங்குகளை விற்பது மற்றும் ரயில்வே துறையை தனியார்மையமாக்குவது போன்றவற்றை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. தற்போது அதற்கான அவசியம் என்ன? என கேள்வி எழுப்பினார்.

மேலும் இந்தியாவில் பாஜகவிற்கு எதிராக உள்ள அனைத்து கட்சித் தலைவர்களிடமும் பேசி, டிசம்பர் இரண்டாவது வாரத்தில் ஐதராபாத்தில் எதிர்கட்சிகளின் மாநாட்டை நடத்தவுள்ளாதாகவும், மோடி அரசிற்கு எதிராக அணி திரண்டு நிற்க, தெலுங்கானா ராஷ்டிர சமிதி போராடும்” என தெரிவித்தார்.

Comments are closed.