CAAக்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்- சந்திரசேகர் ராவ்

0

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கேரள அரசு முதன்முதலில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி அம்மாநில அரசு டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.

கேரள அரசை தொடர்ந்து பஞ்சாப் மாநில சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மேற்கு வங்கத்திலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்தது.

அதைபோல் நேற்று ராஜஸ்தான் சட்டசபையில் பல்வேறு பாஜக உறுப்பினர்கள் சிஏஏக்கு ஆதரவளித்தனர். இருந்தாலும் சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பலைகளே அதிகமாக உள்ளதால் சிஏஏக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது ராஜஸ்தான் அரசு.

“குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரளா, பஞ்சாப், ராஜஸ்தானை சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை போன்று, தெலங்கானா சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்படும். இதுகுறித்து அந்தந்த மாநில முதல்வர்களுடன் நான் பேசி உள்ளேன். இதுதொடர்பாக முதல்வர்கள் மாநாட்டை நடத்தவும் திட்டமிட்டுள்ளேன்”. இவ்வாறு தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் கூரினார்.

Comments are closed.