போலீசாரை தாக்கி 12 லட்சத்தை பறித்துச்சென்ற பாஜகவினர்

0

தெலுங்கானா மாநிலம் துபாக் இடைத்தேர்தளுக்கான வேட்பாளர் உறவினர் வீட்டில் ரூ.18.67 லட்சத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

துப்பக் சட்ட மன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரகுநந்தனின் உறவினர் சுராபி அஞ்சன் ராவின் வீட்டில் சித்திப்பேட்டை காவல்துறையினர் சோதனை நடத்தியதில், 18 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

காவல்துறையினர் பணத்தை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றபோது காவலர்களை பாஜகவினர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். அப்போது அந்த பணத்தில் ரூ.12 லட்சத்தையும் பாஜகவினர் எடுத்துச் சென்றதாகவும், மீதமுள்ள ரூ.5,87,000 லட்சத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சித்திப்பேட்டை ஆணையர் ஜோயல் டேவிஸ் தெரிவித்தார்.

Comments are closed.