“தெலங்கானா முதல்வரான என்னிடம் பிறப்பு சான்றிதழ் இல்லை” -சந்திரசேகர் ராவ்

0

குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிராக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா, மத்திய பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, தங்களது மாநிலங்களில் அமல்படுத்தப்போவதில்லை என தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் நேற்று CAA-NRC-NPR குறித்து விவாதக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், “என்னிடம் பிறப்பு சான்றிதழ் இல்லை. பிறகு எப்படி என் பெற்றோர் உள்ளிட்டோரின் பிறந்த தேதியை என்னால் நிரூபிக்க முடியும்? நான் பிறந்த காலத்தில் மருத்துவமனைகள் கிடையாது. பிறந்த தேதியை வெறும் காகிதத்தில் எழுதப்பட்டது. இவ்வாறான நிலையில் ஏழை எளிய மக்கள் எப்படி பிறந்த தேதியை நிரூபிக்க முடியும்?

இந்த சட்டம் இந்திய அரசியலமைப்புக்கு எதிரான ஒன்று. இதனால் இந்தியாவின் மதிப்பு உலகளவில் சரிந்து வருகிறது. தெலங்கானா சட்டப்பேரவையில் விரைவில் இந்த சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும். அனைத்து மாநிலங்களும் CAAக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” இவ்வாறு சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்.

Comments are closed.