ஐதராபாத் பெயரை மாற்றுவோம்: யோகி கருத்துக்கு முதல்வர் சந்திரசேகர ராவ் கண்டனம்

0

தெலங்கானா மாநில தலைநகா் ஐதராபாத் மாநகராட்சி தோதல் வரும் டிசம்பா் மாதம் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான பிரச்சாரத்தில் பாஜக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஈடுபட்டு பேசியதாவது:

“ஐதராபாத்தை பாக்யநகராகப் பெயர் மாற்ற முடியுமா என்று சிலர் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். ஏன் மாற்ற முடியாது? உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பைசாபாத்தை அயோத்தி என்றும் அலகாபாத்தை பிரயக்ராஜ் என்றும் நாங்கள் பெயர் மாற்றம் செய்தோம். அதுபோல ஐதராபாத் ஏன் பாக்யநகர் என்று பெயர் மாற்றம் செய்ய முடியாது?” என்றார் யோகி ஆதித்யநாத்.

யோகி ஆதித்யநாத் கருத்துக்கு பதிலடி தொடுத்துள்ளார் மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் உவைஸி. ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் மோடிக்கு பதிலாக புதிய பிரதமரை தேர்வு தேர்தல் போல் தெரிகிறது. பாஜக தலைவர்கள் எல்லாம் ஓடி வந்து பிரச்சாரம் செய்கிறார். இன்னும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மட்டும்தான் மீதம். பாஜகவின் அதிகாரத்திற்கு வந்தால் எல்லா இடத்தையும் பெயர் மாற்றம் செய்வார்களாம். உத்தர பிரதேசகத்தில் இருந்து இங்கு பிரசாரம் செய்ய வந்தவர் ஐதராபாத் பெயரை மாற்றுவோம் என்கிறார்.

இந்நிலையில் உவைஸியை தொடர்ந்து தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவும் யோகிக்கு பதிலடி கொடுத்துள்ளார். “ஐதராபாத்தில் அமைதியை குலைக்க சில பிரிவாத சக்திகள் புகுந்துள்ளது. கலவரத்தை தூண்டும் அவர்களின் முயற்சியை நாம் அனுமதிக்க போகிறோமா? அல்லது முறியடிக்க போகிறோமா?

பிளவுவாத சக்திகளிடம் இருந்து ஐதராபாத்தை பாதுகாப்போம். தனி நபர் வருமானத்தில் 28வது இடத்தில் யோகியின் மாநிலம், 5வது இடத்தில் இருக்கும் தெலுங்கானாவுக்கு பாடம் நடத்த வேண்டாம். ஒரு மாநகராட்சி தேர்தலுக்கு பாஜக தலைவர்கள் அனைவரும் பிரசாரத்திற்கு வருவது ஏன்?” இவ்வாறு சந்திரசேகரராவ் கேள்வி எழுப்பினார்.

Comments are closed.