ஐதராபாத் பெயர் மாற்றப்படும்: யோகி கருத்துக்கு உவைஸி கண்டனம்

0

தெலங்கானா மாநில தலைநகா் ஐதராபாத் மாநகராட்சி தோதல் வரும் டிசம்பா் மாதம் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான பிரச்சாரத்தில் பாஜக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஈடுபட்டு பேசியதாவது:

“ஐதராபாத்தை பாக்யநகராகப் பெயர் மாற்ற முடியுமா என்று சிலர் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். ஏன் மாற்ற முடியாது? உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பைசாபாத்தை அயோத்தி என்றும் அலகாபாத்தை பிரயக்ராஜ் என்றும் நாங்கள் பெயர் மாற்றம் செய்தோம். அதுபோல ஐதராபாத் ஏன் பாக்யநகர் என்று பெயர் மாற்றம் செய்ய முடியாது?” என்றார் யோகி ஆதித்யநாத்.

யோகி ஆதித்யநாத் கருத்துக்கு பதிலடி தொடுத்துள்ளார் மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் உவைஸி. ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் மோடிக்கு பதிலாக புதிய பிரதமரை தேர்வு தேர்தல் போல் தெரிகிறது. பாஜக தலைவர்கள் எல்லாம் ஓடி வந்து பிரச்சாரம் செய்கிறார். இன்னும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மட்டும்தான் மீதம். பாஜகவின் அதிகாரத்திற்கு வந்தால் எல்லா இடத்தையும் பெயர் மாற்றம் செய்வார்களாம். உத்தர பிரதேசகத்தில் இருந்து இங்கு பிரசாரம் செய்ய வந்தவர் ஐதராபாத் பெயரை மாற்றுவோம் என்கிறார்.

நீங்கள் என்ன ஹைதராபாத்தை குத்தகைக்கு எடுத்திருக்கிறீர்களா? என்று விமர்சித்த வைஸி, தெலங்கானா உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் தற்போது 5வது இடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேசம் 29வது இடத்திலும், மகாராஷ்டிரம் 10வது இடத்திலும் உள்ளது. இவர்கள் எல்லாம் நம்மை விமர்சித்துவிட்டு செல்கிறார்கள். அவர்கள் எப்படியாவது மதவாத அரசியலை நுழைத்து விடவும், தெலங்கானா அமைதியை கெடுக்கவும் முயற்சிக்கிறார்கள். வருங்காலத்தில் நமது சந்ததியினர் நிம்மதியாக வாழ வேண்டாமா என்பதை யோசித்து பார்த்து வாக்களிங்கள் என்று உவைஸி கூறினார்.

ஐதராபாத் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக அசாதுதீன் ஒவைஸி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.