பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்திய பாஜக எம்.பி. மீது புகார்

0

ஐதராபாத், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் அத்துமீறியதாக கர்நாடக பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக பா.ஜக இளைஞர் அணியை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா எம்.பி-யாக உள்ளார். இவர் பாஜக தொண்டர்களுடன் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் அத்துமீறி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை சேதப்படுத்தியுள்ளார்.

இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர், தேஜஸ்வி சூர்யா அத்துமீறி பல்கலைக்கழகத்தில் கூட்டம் நடத்தியும்,  தடுப்புகளை சேதப்படுத்தியும் உள்ளார்.  இதனால் அவர் மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்தியாவில் பாஜகவிற்கு எதிராக உள்ள அனைத்து கட்சித் தலைவர்களிடமும் பேசி, டிசம்பர் இரண்டாவது வாரத்தில் ஐதராபாத்தில் எதிர்கட்சிகளின் மாநாட்டை நடத்தவுள்ளாதாகவும், மோடி அரசிற்கு எதிராக அணி திரண்டு நிற்க, தெலுங்கானா ராஷ்டிர சமிதி போராடும்” என அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.