பாஜகவினர் போலி இந்துக்கள்: ஆவேசமாக விளாசிய முதல்வர்!

0

பாஜகவினர் தான் உண்மையான இந்துக்கள் என்று தன்னை தானே அவர்கள் கூறிக்கொள்வது முற்றிலும் பொய். உண்மையில் அவர்கள் போலி இந்துக்கள், உண்மையான இந்துக்கள் நாங்கள் தான் என்று தொலுங்கான மாநில முதலமைச்சர்  சந்திரசேகரராவ் ஆவேசமாக கூறியுள்ளார்.

தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது பேசிய அவர், கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் மற்றும் பாஜக, இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒன்றுமே செய்யவில்லை.  உண்மையாகவே காங்கிரஸ் கட்சி வேலை செய்திருந்தால் இந்தியா வளமாக இருந்திருக்கும். காங்கிரஸ் கட்சியும், பாஜக கட்சியும் ஒரே மாதிரிதான் ஆட்சி செய்கிறது.

இந்த இரு கட்சிகளும் ஒரு திட்டம் ஆரம்பித்தால், அந்த திட்டத்திற்கு அந்தந்த கட்சி தலைவர்களின் பெயர்களை மட்டும் தான் சூட்டுவார்களே தவிர மக்களுக்கு பயனளிக்கும் வகையில் எதுவும் இருக்காது.

மேலும் இந்தியாவில் காங்கிரஸ், பாஜக இல்லாத மூன்றாவது அணி மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும்’ என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் பேசினார்.

Comments are closed.