தீவிரவாத குழுக்களிடம் பா.ஜ.க. நன்கொடை: அம்பலமான அதிதீவிர தேசபக்தி!

0

2017-18ம் ஆண்டில் இந்தியாவில் பெருநிறுவனங்களிடம் இருந்து அதிக நிதியை நன்கொடையாக பெற்ற கட்சி பா.ஜ.க. மொத்தமாக ரூ. 437.04 கோடி ஆகும். மற்ற காங்கிரஸ், சி.பி.எம். என முக்கிய 6 தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடை ரூ. 469.89 கோடி.

  • அதிக நன்கொடை வழங்கிய RKW டெவலப்பர்ஸ்

இந்த தேசபக்தர்கள் 2014-2015 ஆண்டில் RKW டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.10 கோடி நிதியாக நன்கொடை பெற்றுள்ளனர். இந்நிறுவனம் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீமின் நெருங்கிய கூட்டாளி, 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி இக்பால் மிர்ச்சி என்றழைக்கப்படும் இக்பால் மேமன் அவருடன் தொடர்புடையது. மேலும் அவரிடம் நிலம் வாங்கிய நிறுவனம்.

இது தொடர்பான மத்திய அமலாக்கதுறையின் விசாரனை வளையத்தில் உள்ள தீவிரவாத செயல்களுடன் தொடர்புடைய இந்நிறுவனத்திடம் இருந்து ரூ. 10 கோடி நிதி பெற்றுள்ளதை வெளியே கொண்டு வந்துள்ளது THE WIRE செய்தி நிறுவனம். தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க. சமர்ப்பித்துள்ள கட்சி பெற்ற நிதி குறித்த அறிக்கையில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. பா.ஜ.க. பல்வேறு பெருநிறுவனங்களிடம் நிதி பெற்று அவர்களுக்காக விசுவாசமாக உழைக்கும் ஒரு கட்சி. இதில் RKW டெவலப்பர் நிறுவனம் தான் பெருந்தொகையை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. RKW நிறுவனத்தைத் தவிர வேறு எந்த நிறுவனமும் பா.ஜ.க.விற்கு நேரடியாக இவ்வளவு நிதியை வழங்கவில்லை.

  • மிர்ச்சியுடன் வியாபாரம்: தேசத்துரோகத்திற்கு இணையான குற்றம்

இக்பால் மிர்ச்சிக்கும் பிற நிறுவனங்களுக்கும் இடையிலான தரகு ஒப்பந்தங்களுக்கு ஆர்.கே.டபிள்யூ. டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ரஞ்சித் பிந்த்ரா உதவினார். இதற்காக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆர்.கே.டபிள்யூ. டெவலப்பர்ஸ் நிறுவனத்தை போல், இக்பால் மிர்ச்சியுடன் தொடர்புடைய பல நிறுவனங்களிடம் இருந்து கோடிக் கணக்கில் நிதி பெற்றுள்ளது பா.ஜ.க.

இக்பால் மிர்ச்சியிடம் நிலம் வாங்கியதால் அமலாக்கத்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ள சன்பிளிங்க்(SUNBLINK) என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்திடமிருந்து பா.ஜ.க. ரூ. 2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஸ்கில் ரியல் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் ரூ. 2 கோடி நன்கொடை அளித்துள்ளது.

தர்ஷன் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் 2016-17ம் ஆண்டில் பாஜகவுக்கு ரூ. 7.5 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்நிறுவனமும் மிர்ச்சி – ஆர்.கே.டபிள்யூ உடன் தொடர்புடைய நிறுவனம்.

  • இது தேசத்துரோகம் இல்லையா? மிஸ்டர் அமீத் ஷா

மகாராஷ்டிரா மாநில தேர்தலுக்கு முன்னர், இக்பால் மிர்ச்சி வழக்கில் தேசியவாத காங்கிரஸ் (NCP) தலைவர் பிரபுல் படேலை அமலாக்கத்துறை விசாரித்தது. படேல் எந்த தவறும் செய்யவில்லை என மறுத்தபோதும், பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரச்சார பேரணியில் இந்த வழக்கு விசாரனையை தொடர்புப்படுத்தி பிரச்சாரம் செய்தார், “பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமானவர்களை கைது செய்வதற்கு பதிலாக, அதிகாரத்தில் இருந்தவர்கள் மிர்ச்சி-யுடன் வியாபாரத்தில் ஈடுபட்டனர்” என மோடி விமர்சித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மிர்ச்சியுடன் வியாபாரம் செய்வது “தேசத்துரோகத்திற்கு இணையான குற்றம்” என்று கூறினார். இந்நிலையில் பா.ஜ.க. மிர்ச்சியுடான தொடர்பு வெளிவந்துள்ள நிலையில் “இது தேசத்துரோகம் இல்லையா? மிஸ்டர் அமீத் ஷா” என காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜ்வாலா ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘பா.ஜ.க.விற்கு பணம் தான் முக்கியம் என்பது இதன் மூலம் தெளிவாகி விட்டது’ என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

தீவிரவாதிகளிடம் நிதி பெற்ற தேசபக்தர்கள் மோடியும், அமீத் ஷாவும் நாடாளுமன்ற நிகழ்வில் என்ன பதில் சொல்வார்கள் என பார்ப்போம்.

Comments are closed.