கொரோனா: திட்டமிட்டு இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழும் ஆர்.எஸ்.எஸ்.

0

பல மாநிலங்களில் தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் தான் அதிக அளவில் கொரோனாவுக்கு ஆளாகியள்ளதாக ஆர்.எஸ்.எஸ் துணை பொதுச் செயலாளர் மோகன் வைத்யா கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர்’ “கொரோனா நோய் ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை ஒருசில நாளில் அதிகரிக்க தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள்தான் காரணம். அவர்கள்தான் தவறு செய்துள்ளனர். மத்திய அரசுக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மத்திய அரசு பல முடிவுகளை எடுத்து வருகிறது” எனறார் மோகன் வைத்யா.

மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்போது வல்லரசு நாடுகளே அச்சத்தால் திணறின. அப்போது கொரோனா தற்காப்பு நடவடிக்கைகளை முறையாக திட்டமிட தவறியது மோடியின் பாஜக அரசு. மாறாக CAA-NRC-NPR போன்ற மதவாத சட்டங்களை அமல்படுத்த தீவிரம் காட்டியது.

தற்போது கொரோனா நோய் தொற்று பருவுவதையும், அதிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளிலும் பாஜக அரசு தேல்வியடைந்துள்ளது என்று அனைத்து தரப்பு மக்களும் குற்றம்சாட்டுகின்றனர். இதனை மறைப்பதற்காகவே இஸ்லாமிய மக்கள் மீது, பாஜக அரசும் அவர்களுடைய சங்பரிவார் அமைப்பும் வெறுப்பு பிரச்சாரத்தை தொடர்ச்சியாக செய்து வருகின்றன.

Comments are closed.