கொரோனா சர்ச்சை: தப்லீக் ஜமாஅத் பட்டியலில் இந்துக்களின் பெயர் வந்தது எப்படி?-திடுக்கிடும் தகவல்!

0

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளுகி வருபவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டி வருகிறது.

அவ்வகையில் இந்தியாவில் ஜனவரி இறுதியில் கொரோனா பரவ தொடங்கியதும், பாஜக அரசு திட்டமிடாமல் தப்லீக் ஜமாஅத்தினர் மீது கொரோனா நோய் பழி போட்டது. டெல்லி நிஜாமுத்தீன் தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டவர்களால்தான் கொரோனா பரவியது என்ற பாஜக அரசும், அதன் சங்பரிவார்களும் பொய்யான குற்றச்சாட்டை வைத்தனர்.

இந்நிலையில் சத்தீஸ்கரில், டெல்லி நிஜாமுத்தீன் தப்லீக் ஜமாத்தில் கலந்து கொண்டவர்கள் என்ற 159 பேர் கொண்ட பட்டியலை உயர் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. அந்த பட்டியலை ஆய்வு செய்ததில் அதில் பலர் முஸ்லிம் அல்லாதவர்கள் என தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து மனுதாரர் தெரிவிக்கையில், டெல்லி சென்றதாக கூறப்படும் 159 பேரில் 107 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் மீதமுள்ளவர்களை காணவில்லை என்றும் அவர்களை கண்டுபிடிக்க அரசு தவறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து, பிபிசி இந்தி செய்தி நிறுவனம் ஆய்வு மேற்கொண்டதில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி சென்றதாகக் கூறி அந்த பெயர் பட்டிலில் உள்ளவர்களைத் தொடர்பு கொண்டபோது, “நான் இந்து மதத்தை சேர்ந்தவன். பிராமணன், எனக்கும் தப்லீக் ஜமாத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை” என்று தெரிவித்துள்ளார். இதுபோல பலரும் தான் முஸ்லிம் அல்லாதவர்கள் என தெரிவித்தனர்.

இதனையடுத்து டெல்லி ஜமாத்துக்கும், கொரோனா வைரஸுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ். சிங்தேவ் தெரிவித்துள்ளார்.

Comments are closed.