தப்லிக் ஜமாத் வழக்கு: பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

0

இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை கக்கும் விதமாக தப்லிக் ஜமாத் குறித்து உள்நோக்கத்துடன் செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், பாஜக அரசை உச்ச நீதிமன்றம் விமர்சித்துள்ளது.

டெல்லி நிஜாமுதீன் மர்கஸில் உள்ள தப்லிக் ஜமாஅத் கூட்டத்தில் கோவிட்-19 பரவியது தொடர்பாக மதவாத நோக்கில் சித்தரித்த ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி ஜாமியத் உலமா-இ-ஹிந்த் மற்றும் பலர் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு இரண்டு நாட்களுக்கு முன்னர் விசாரித்தது.

இது குறித்து, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இளநிலை அதிகாரி சொலிசிட்டர் ஜெனரல் துஷா மேத்தாவை, ஊடகங்கள் செய்தி வெளியிடுதல் தொடர்பான தேவையற்ற மற்றும் முட்டாள்தனமான அவதூறுகள் அடங்கி பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ததற்கு நீதிபதிகள் அமர்வு கண்டித்தது.

இதுபோன்ற வழக்குகளில் உள்நோக்கம் கொண்ட ஊடக செய்திகளை தடுக்க கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களுடன் செயலாளர் அளவில் உள்ள அதிகாரியிடம் இருந்து பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

ஜமாஅத் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே நீதிமன்றத்தில், மத்திய பாஜக அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் மனுதாரர்களின் கருத்து சுதந்திரத்தை மூடிமறைத்துள்ளதாக கூறினார்.

இதையடுத்து இந்த மனுக்கள் மீதான விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Comments are closed.